தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Empty சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்...

Tue Oct 21, 2014 8:14 pm
சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Untitled%2012(109)''ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. உணவோடு, உடற்பயிற்சி, உடலுக்கு ஏற்ற எடை என சீரான வாழ்க்கையால் மட்டுமே... சர்க்கரை நோய் நெருங்கவிடாமல் செய்ய முடியும். சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்'' என்கிறார் டாக்ட‌ர் கு.கணேசன்.

* வெந்தயம்:

தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Untitled%2011(134)* தேன்:

சிலர் சர்க்கரைக்கு பதில் வெல்லம் (அ) தேன் சேர்த்துக் கொள்வார்கள். இது தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கும் அளவீடும் தேனுக்கும் சர்க்கரைக்கும் அதிகம். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுடன் உயர் ரத்த அழுத்தம், நரம்பு பாதிப்பு, விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Untitled%2010(168)* கைகுத்தல் அரிசி:

கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மைதான்.  கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் உடனடியாக ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது. ஆனால், கைக்குத்தல் அரிசியையும் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

* சைவம்/அசைவம்:

எந்த உணவானாலும் சரி... சாப்பிடும் உணவின் அளவைப் பொறுத்தும், அந்த உணவின் ரத்தச் சர்க்கரையை உயர்த்தும் அளவைப் பொறுத்தும்தான் சைவம் நல்லதா, அசைவம் நல்லதா என்பதைக் கூற‌ முடியும். ஆனால், பொதுவாக, சர்க்கரை நோயாளிக்கு சைவ உணவுதான் நல்லது. காரணம், நார்ச்சத்து, சைவ உணவுகளில்தான் அதிகம் இருக்கிறது. மேலும், கலோரி, கொழுப்பு குறைவாகவே இருக்கிறது.

சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Untitled%209(198)* பாகற்காய்:

பாகற்காயில் அல்கலாய்ட்ஸ் என்ற இரண்டு வேதிப் பொருள்கள் இருப்பதால், சர்க்கரை குறைவதற்கு வாய்ப்பு உண்டு. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதியியல் அமைப்பு இன்சுலினை ஓரளவுக்கு ஒத்துப் போகிற‌து. தவிர, பாகற்காயில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவு. ஆனால், தினமும் பாகற்காய் மட்டுமே சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று உறுதியாக கூறுவதற்கு இல்லை.

- ரேவதி



நன்றி: விகடன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum