தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி Empty இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி

Thu Apr 17, 2014 1:20 pm
இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி 503ziegenbalg
இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்டான்ட்) முதல் மிஷனரிபர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. 

மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து, கனிவாய் செயல்பட்ட விதம்,மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள், எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில. 

மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப மிக முக்கிய பாடங்ளை அறியலாம். 


பிறப்பும் இளமைப் பருவமும்: 

சீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா?). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார். 

சீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார். 


மனந்திரும்புதலின் அனுபவம்: 

பால்னிட்ஸில் லத்தின் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சீகன்பால்க் கோயர்லிட்ஸில் தனது 12-ம் வயதில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். அவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் அவரை கடவுளைத் தேதும்படிச் செய்து சில மாதங்களுக்குப் பிறகு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. அவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. அதன் விளைவாக அவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றலாயிற்று. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் அவரில் எழுந்தது. 


கல்வியும் மிஷனரிப் பணி ஆயத்தமும்: 

1703 ல் இறைஇயலில் உயர்கல்வி பெற சீகன்பால்க் ஹாலே பல்கலைகழகம் வந்து சேர்ந்தார். பிலிப் ஸ்பென்னர் மற்றும் ஆகஸ்ட் பிராங்கே (August Franகெ) என்பவர்களின் நூற்களால் மிகவும் கவரப்பட்டார். நவீன மிஷனரி இயக்கம் தோன்ற காரணமாயிருந்த பக்தி இயக்கத்திற்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்த ஸ்பென்னர் தான். பக்தி இயக்கம் 17ம் நூற்றாண்டில் ஸ்பென்னரால் ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்டது. பிராங்கேயின் முயற்சியால் ஹாலே பல்கலைக்கழகம் பக்தி இயக்கத்தின் கல்வி மையமாகத் திகழ்ந்தது. 

ஹாலேயில் கல்வி பயின்ற நாட்களில் சீகன்பால்க் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது சரீர பலவீனத்தைக் குறித்து குறிப்பிடுகையில் "நான் எங்கிருந்தாலும் என் நேசக் சிலுவை என்னைப் பின் தொடருகிறது" என்பார். இருப்பினும் அவர் அனுபவித்திருந்த இயேசு அருளிய சுவிசேஷத்தின் பெலன் அவரது எல்லாச் சரீர பெலவீனங்களிலிருந்தும் அவரைத் தூக்கி நிறுத்தியது. உண்மையிலேயே இறையியல் பயிற்சியின் கடுமையான படிப்பிற்கு ஈடுகொடுக்க அயராது உழைத்தார். பரிசுத்த வேதாகமத்தைச் சலிப்பின்றிப் படித்தார். நல்ல முறையில் எபிரேய மொழியைக் கற்றார். மற்றவர்களுக்கு போதிக்கிற தான் ஆகாதவனாகாதபடி தன்னை காத்துக்கொள்ள அனுதினமும் ஜெபித்து தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டார். அவருக்கிருந்த சரீர பெலவீனம் அவர் கருணையுடனும் மன பணிவுடனும் வாழ பெருந்துணைப் புரிந்தது. 


மிஷனரிப் பணி அழைப்பு: 

சீகன்பால்க்கின் இறையல் பயிற்சி நாட்களில் திருச்சபை போதக அருட்பணிக்குப் பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் மிஷனரி அருட்பணியில் அவர் கொண்டிருந்த பேராவலும் அதற்கு அவர் செய்த அர்ப்பணிப்பும் மற்ற பணிகளின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாது மறுப்பு செய்ய உதவின. நான்காம் பிரடெரிக் மன்னை தென்னிந்தியக்குடி அமைப்பிற்கு மிஷனரிகளை அனுப்பி கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அருட்பணியாற்றிட பேராவல் கொண்டிருந்தார். இளைஞனாய் ஹாலேயில் இறைஇயல் பயின்றுக் கொண்டிருந்த சீகன்பால்கிற்கு மிஷனரி அழைப்பு மன்னர் சார்பில் அளிக்கப்பட்டது. உண்மையில் இந்த அழைப்பினால் அவர் இறைஇயல் கல்வியை அப்போது தான் ஆரம்பித்திருந்ததாலும் அவரது உடல்நிலை மோசமாயிருந்ததாலும் அவரது வாலிபம் மிஷனரி அழைப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயாராக இல்லை. அவர் மிஷனரி அழைப்பை ஏற்றுக்கொள்ளச் சற்று தயக்கம் காட்டியதற்கு காரணமே அவரால் மிஷனரி பணியை நன் முறையில் நிறைவேற்ற முடியாது என்ற எண்ணமே தவிர அது தீர்வான மறுப்பில்லை. பின்னர் அந்த அழைப்பை தூர தேசத்தில் அருட்பணி செய்யும் படியாக இறைவனே தந்த அழைப்பாக எண்ணி அதனை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க்கின் பெயரும் ஹென்றி புளுட்சோவின் பெயரும் டென்மார்க்கிலுள்ள கோப்பனேகனுக்கு அனுப்பப்பட்டது. அரசாணையின்படி இந்த இரு இறைஇய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் லூத்த‌ர‌ன் பேராய‌ரால் குரு அபிஷேக‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌‌ன‌ர். பின்னர் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ அர‌ச‌ மாளிகைக்கு அழைத்த‌ன‌ர். 

அப்போஸ்த‌ல‌ர் ந‌ட‌ப‌டிகளின் நூலின் அடிப்ப‌டையில் ஓர் சிற‌ப்பு செய்தியை ம‌ன்ன‌ரின் குடும்ப‌த்திற்கு சீக‌ன்பால்க் அளித்தார். அந்த‌ நாள் முத‌ல் அர‌ச‌ குடும்ப‌த்துட‌ன் மிகுந்த‌ ந‌ட்பு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர‌து ம‌ர‌ண‌ம் வ‌ரை அந்த‌ ந‌ட்பு தொட‌ர்ந்த‌து. ப‌ல‌ தேச‌ங்க‌ளைக் குறித்து சிந்தித்த‌ப் பின்ன‌ர் இந்தியாவிற்கு மிஷ‌ன‌ரிக‌ளை அனுப்ப‌ பிர‌டெரிக் ம‌ன்ன‌ர் தீர்மானித்தார். புளூட்சோ, சீக‌ன்பால்க்கை விட‌ ச‌ற்று திற‌மை குறைந்த‌வ‌ராக‌யிருந்த‌ப‌டியால் அவ‌ர் பின்ன‌ணியில் தான் செய‌ல்ப‌ட்டார். இருப்பினும் இவ்விருவ‌ரும் ஒன்றுப‌ட்டு ஒரு ந‌ல்ல‌ மிஷ‌ன‌ரி அணியாக‌த் திக‌ழ்ந்த‌ன‌ர். 


த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ருகை: 

இள‌ம் மிஷ‌ன‌ரிக‌ளான‌ சீக‌ன்பால்க்கும் புளுட்சோவும் 1706ம் ஆண்டு ஜூலை 6ம் நாள் த‌மிழ்நாட்டின் காயிதேமில்ல‌த் மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ந்து சேர்ந்த‌னர். த‌ர‌ங்க‌ம்பாடியில் டென்மார்க் குடிய‌மைப்பு ஆளுந‌ரும் ம‌ற்றும் ஐரோப்பிய‌ போத‌க‌ர்க‌ளும் மிஷ‌ன‌ரிக‌ளுக்கு ந‌ல்வ‌ர‌வு அளிக்க‌வில்லை. த‌ர‌ங்க‌ம்பாடிக்கு வ‌ர‌ அனும‌தியாம‌ல், மூன்று நாட்க‌ள் க‌ப்ப‌லில் த‌ங்கும் நிர்ப‌ந்த‌த்தை ஆளுந‌ர் ஏற்ப‌டுத்தினார். ப‌ட்ட‌ண‌த்திற்குள் வ‌ந்த‌ பிற‌கும் ச‌ந்தைவெளியில் ப‌ல‌ம‌ணிநேர‌ம் கொளுத்தும் வெயிலில் அதிகாரிக‌ளால் கைவிட‌ப்ப‌ட்ட‌ நிலையில் எங்கே த‌ங்குவ‌தென‌ திகைத்து நின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளை யாரும் ச‌ட்டை ப‌ண்ண‌வில்லை. 

அனைத்து சூழ்நிலைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் செய‌ல்ப‌ட்ட‌ன‌. டென்மார்க் அர‌ச‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒற்ற‌ர்க‌ள் என்று ம‌க்க‌ள் இவ‌ர்க‌ளை ச‌ந்தேகிக்க‌லாயின‌ர். ஆனால் அதைரிய‌ப்ப‌டாது இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை முத‌ல் மிஷ‌ன‌ரிக‌ள் அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் துன்ப‌ங்க‌ளையும் ச‌கித்த‌ன‌ர். பின்ன‌ர் அடிமைக‌ளாக‌ எண்ண‌ப்ப‌ட‌ இந்திய‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் வாழும் ப‌குதியில் சென்று த‌ங்கின‌ர். ம‌னித‌னால் கைவிட‌ப்ப‌ட்டும் தேவ‌னால் நெகிழ‌ப்ப‌ட‌வில்லை இந்த‌ கொடூர‌ எதிர்ப்புக‌ள் ம‌த்தியிலும் த‌ன‌து அருட்ப‌ணியாள‌ருக்கு உத‌வி செய்ய‌ ஆண்ட‌வ‌ர் ஆய‌த்த‌ப்ப‌டுத்தி வைத்திருந்தார். அவ‌ர்க‌ள் ப‌ட‌கிலிருந்த‌போது முத‌லிய‌ப்பா என்ற‌ இந்திய‌ இளைஞ‌ன் அவ‌ர்களுக்கு உத‌வியாயிருக்க‌ முன் வ‌ந்தான். அத்துட‌ன் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றிய‌ ஜெர்மானிய‌ ப‌டைவீர‌ர் அவ‌ருக்கு ப‌க்க‌ப‌ல‌மும் ப‌ண‌ உத‌வியும் அளிக்க‌ முன் வ‌ந்த‌ன‌ர். விரைவில் வெகு விம‌ரிசையாக‌ சீக‌ன்பால்க் த‌ன் மிஷ‌ன‌ரிப்ப‌ணியை ஆர‌ம்பித்தார். 


இந்திய குழந்தைகளுக்கு தங்கும் வசதி கொண்ட பள்ளிகூடம் நிறுவினார்: 

இந்திய அடிமைகளோடு மிஷனரிகள் வாழ்ந்தபடியால், அவர்கள் மத்தியில் தங்கள் முதல் அருட்பணியை ஆரம்பித்தனர். குடியமைப்பில் வாழ்ந்த ஐரோப்பியர்களின் இல்லங்களில் பணியாற்றிய இம்மக்களின் ஏழ்மை சீக‌ன்பால்க்கை மிகவும் ஈர்த்தது. முதல் மிஷனரிப் பள்ளி இந்த அடிமை மக்களின் குழ்ந்தைகளுக்காக ஆரம்பமாயிற்று. ஜெர்மானியில் பிராங்கே என்பவரின் மாதிரியைப் பின்பற்றி அநாதை குழந்தை காப்பகத்தை ஏற்படுத்தினார். இந்த அடிமைக் குழந்தைகளை அவர்களது ஐரோப்பிய காப்பாளரிடம் கிரயம் கொடுத்து வாங்கி பின்பு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவ நெறிப்படி வளர்ந்து வந்தார். இந்த இளஞ் சிறுவர்களுக்கு கல்வி புகட்டி, பயிற்சி அளித்து வருங்கால நற்செய்திப் பணிக்கு பயன்பதுத்த வேண்டும் என்பதே அவர் திட்டம். 


இந்திய கிறிஸ்தவர்களுக்காக கட்டிய முதல் ஆலயம்: 

இந்திய திருச்சபையின் எதிர்காலத்தைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு சீக‌ன்பால்க்குக்கு இருந்தது. அவரது அருட்பணி பலனளித்து 1707-ல் ஆண்டு மே 12-ம் நாள் போர்த்துகீசிய மொழி பேசும் 5 இந்தியர்கள் இயேசுவை இரட்சகராக அறிக்கைப் பண்ணி, திருமுழுக்குப் பெற்று இயேசுவில் தங்களுக்கிருந்த மகிழ்ச்சியை அறிக்கையிட்டனர். விரைவில் தங்களுக்கென ஒரு ஆலயம் கட்ட வேண்தியதின் தேவையை உண்ர்ந்தனர். அவர்கள் ஐரோப்பியர் ஆலயங்களில் உட்காரத் தயங்கினர். இந்தியருக்கென தனி ஆலயம் அமைக்கும் திட்டத்தை வெகுவாய் ஆட்சேபித்து, ஆலயம் கட்ட இடம் தர ஐரோப்பிய ஆளுநர் மறுத்தார். இருப்பினும் ஆதரவு இல்லாமையால் ஆலயம் கட்டும் திட்டம் நின்று விடவில்லை. விரைவிலேயே ஓர் இடம் கிடைத்து ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயம் கட்ட பணம் குறைவு பட்ட போது மிஷனரிகள் தங்கள் சம்பளத்தில் பகுதியை கொடுத்தும் ஸ்தல மக்கள் உதவி செய்தும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1707-ம் ஆண்டு 14-ம் நாள் இந்திய கிறிஸ்தவர்கள் பேரானந்திக்க ஆலயம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் பெருகிய போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது எருசலேம் என்ற பேராலயமாக 1717-ம் ஆண்டு பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. இதுவே இன்றும் லூத்தரன் திருச்சபையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 


கிராமத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது: 

கிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் சீகன்பால்கிற்கு மிகுந்த ஆவலும் வாஞ்சையும் இருந்தது. இவர்கள் எவ்வித பயமும் கவலையுமின்றி தங்கள் இறைவணக்கத்தைச் செய்து வந்தனர். இவர்களுக்கு நற்செய்தியை திறம்பத அறிவிக்க தமிழ் மொழியையும் மக்களின் கலாச்சாரத்தையும் சீகன்பால்க் கற்றறிருந்து அவர்களின் உணர்வுகளையும் கண்ணோட்டத்தையும் நன்கு புரிந்து கொண்டார். 

சீகன்பால்க் தனது நேரத்தை மொழி கற்றல், திருமறை மொழியாக்கம், குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளியை பராமரிதல் போன்றவற்றிற்கு செலவழித்ததோடு தூர இடங்களில் காணப்பட்ட கிராமங்களுக்கும் சென்று நற்செய்தியை பிரசங்கிக்கவும் செய்தார். சென்னைக்கும் கடலூருக்கும் அவர் விஜயம் செய்தபோது கிராமங்களைச் சந்தித்து வழியில் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். நற்செய்தியை அந்தணர்களோடு விவரித்தும் தாழ்ந்த ஜாதியினருக்கு அறிவித்தும் வந்தார். போதுமான ஆன்மீக வழிநடத்துதல் இல்லாமலிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தனது அருட்பணியைச் செய்தார். 


திருமறைத் தமிழாக்கம்: 

திருமறைத் தமிழாக்கம் சீகன்பால்க் தமிழ் திருச்சபைக்கு ஆற்றிய முக்கிய தொண்டாக கருதப்படுகின்றது. மிகக்குறுகிய காலத்தில் கற்பதற்கு கடினமான தமிழ் மொழியை பிழையறக் கற்று பண்டிதரானார். விரைவில் திருமறையைக் தமிழில் மொழியாக்கம் பணியைத் துவங்கினார். ரோமன் கத்தோலிக்கர்களால் உருவாக்கிய தமிழ் பதங்களைக் கொண்ட அகராதியை அவர் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டு தமிழாக்கம் நிறைவுப்பெற்று 1713 ல் அச்சடிக்கப்பட்டது. பழைய ஏற்பாடும் ரூத் புத்தகம் வரை அவர் மொழிப் பெயர்த்திருந்தார். பின்னர் வந்த மிஷனரிகள் மீதமுள்ள நூற்களை முடித்து முழு திருமறையையும் தமிழில் தந்தனர். இந்த மொழியாக்கம் பெப்பிரிஸியஸ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக இந்திய மொழிகளில் தமிழ்மொழி தான் முதன் முறையில் திருமறையை பெறும் வாய்ப்பை பெற்றது. 


தமிழ் இலக்கண நூல் பதிக்கப்பட்டது: 

சீக‌ன்பால்க் மொழியாற்ற‌ல் பெற்ற‌வ‌ராயிருந்தார். அவ‌ர் இந்தியா வ‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திலேயே த‌ள‌ர்ப‌ட‌மாய் த‌மிழைப் பேசிய‌தைக் க‌ண்ட‌ த‌மிழ‌ர் மெய்சிலிர்த்த‌ன‌ர். ந‌ல்ல‌ த‌மிழ் ஆசிரிய‌ர்க‌ளின் நூற்க‌ளை அனுதின‌மும் ப‌டித்தார். ந‌ல்ல‌ ஆழ்ந்த‌ வாக்கிய‌ அமைப்புக‌ளை ம‌றுப‌டியும் ப‌டித்து ம‌ன‌தில் ப‌தித்துக்கொண்டார். ஒரே வார்த்தையையோ ஒரே உச்ச‌ரிப்பையோ ப‌ல‌முறைச் சொல்ல‌ அவ‌ர் அலுத்த‌தே இல்லை. இந்த‌ அய‌ராது உழைப்பின் உய‌ர்வாக‌ த‌மிழில் இல‌க்க‌ண‌ நூலை அவ‌ர் த‌யாரிக்க‌ முடிந்த‌து. அவ‌ர் ஹாலே ப‌ட்ட‌ண‌த்தில் 1715 ல் ஆண்டு இந்த‌ இல‌க்க‌ண‌ நூல் அச்ச‌க‌ப் ப‌ணியை நேர‌டியாக‌ க‌ண்காணித்தார். இப்ப‌டி த‌மிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றி வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரிக‌ள் த‌மிழ் மொழியை எளிதில் க‌ற்க‌ பெரிதும் உத‌வி புரிந்தார். 


திரும‌றைக் க‌ல்லூரி நிறுவ‌ப்ப‌ட்ட‌து: 

சீக‌ன்பால்க் தொலைத் தூர‌ப் பார்வையுட‌ன் எதிர்கால‌த்தை நினைவிற் கொண்டு வ‌ருங்கால‌ திருச்ச‌பைத் த‌லைமைத் துவ‌த்திற்காக‌ இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ வேண்டுமென‌ உண‌ர்ந்தார். இந்த‌ த‌ரிச‌ன‌த்துட‌ன் எட்டுப்பேரைக் கொண்டு 1716 ல் த‌ர‌ங்க‌ம்பாடியில் தான் முத‌ன் முத‌லில் இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை இறையிய‌லை இந்தியாவில் புக‌ட்டிய‌து. அநேக‌ர் கிராம‌ ந‌ற்செய்தி ம‌ற்றும் போத‌க‌ அருட்ப‌ணிக்காக‌ இங்கு ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இப்பயிற்சிக்காக‌ த‌மிழ் திருச்ச‌பையை சேர்ந்த‌ ம‌க்க‌ளை மிக‌க் க‌வ‌ன‌த்துட‌னும் பொறுப்புட‌னும் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌த்த‌க்க‌தாகும். பின்ன‌ர் வ‌ந்த‌ மிஷ‌ன‌ரிக‌ளும் சீக‌ன்பால்க்கினால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌யிற்சி முறைக‌ளைக் கையாண்ட‌ன‌ர். இத‌ன் விளைவாக 1733 ம் ஆண்டிலேயே இந்து ம‌த‌த்திலிருந்து கிறிஸ்த‌வ‌ரான‌ ஆரோன் என்ப‌வ‌ர் த‌மிழ் லுத்த‌ர‌ன் திருச்ச‌பையின் முத‌ல் போத‌க‌ராய் போத‌காபிஷேக‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அருட்ப‌ணிக்காக‌ ப‌யிற்றுவிக்க‌ ஒரு மிஷ‌ன‌ரிக்கு த‌னிப் பொறுப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு ஒதுக்க‌ப்ப‌ட‌ வேண்டுமென்று சீக‌ன்பால்க் மிஷ‌ன் த‌லைமைக்கு ப‌ரிந்துரையும் செய்தார். 


இளைஞ‌ர்க‌ளுக்கு ப‌யிற்சிப் ப‌ள்ளி துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து: 

தொல‌தூர‌ நோக்கோடு வாலிப‌ர்க‌ளை ஆசிரிய‌ப் ப‌ணிக்கும் போத‌க‌ப் ப‌ணிக்கும் சீக‌ன்பால்க் ப‌யிற்றுவித்தார். இந்த‌ நோக்க‌த்திற்காக‌ கிறிஸ்த‌வ‌ வாலிப‌ர்க‌ள் த‌ங்க‌ள் இல்ல‌ங்க‌ளிலிருந்து பிரித்தெடுக்க‌ப்ப‌ட்டு காப்ப‌க‌ங்க‌ளில் த‌ங்க‌ வைத்து க‌ல்வியும் ப‌யிற்சியும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌ வாலிப‌ர்க‌ளுக்கு உண‌வு, உறைவிட‌ம், உடுக்க‌ துணிக‌ள் கொடுத்து ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌ட்ட‌து. திருச்ச‌பைக‌ளிலும் பாட‌க‌ சாலைக‌ளிலும் இவ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌து. ஏனையோருக்கு குடிய‌மைப்பு நிர்வாக‌த்தில் உய‌ர்ப‌த‌வி த‌ர‌ப்ப‌ட்டு பொருளாதார‌ தாழ்வு நிலையிலிருந்த‌ கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ங்க‌ள் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. 


இல‌க்கிய‌ப் ப‌ணி வ‌ள‌ர்ச்சி அடைத‌ல்: 

1713 ம் ஆண்டு ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலிருந்து மூன்று எழுத்து வ‌டிவ‌மைப்பும் அச்சு இய‌ந்திர‌மும்மிஷ‌ன‌ரிப்ப‌ணிக்கென‌ த‌மிழ‌க‌த்திற்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ் எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ ஒரு அச்ச‌க‌த‌தைபிராங்கே உருவாக்கியிருந்தார். இறுதியில் ஆங்கில‌ எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ அச்ச‌க‌மும் அச்சுத்தாளுட‌ன் வ‌ந்துசேர்ந்த‌து. இந்த‌ வ‌ச‌திக‌ளைக் கொண்டு த‌மிழ் இல‌க்கிய‌ப் ப‌ணி வெகுவாய் விரிவுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. பாமாலை நூல்,பாடல் நூல் தமிழாக்கம் செய்து அச்சிடப்பட்டது. ஜெபப்புத்தகமும், தியானப்புத்தகங்களும் பின்னை மொழியாக்கம்பெற்று அச்சிடப்பட்டு, இவ்விலக்கியங்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் விரிவான முறையில்விநியோகிக்கப்பட்டது. 


கடலூர், சென்னை மற்றும் இலங்கைக்கு அருட்பணி விரிவு செய்தல்: 

சீகன்பால்க் டென்மார்க் குடியமைப்போடு தன் அருட்பணியை முடித்துவிடாது தன் பரந்த நோக்கோடும் ஆழ்ந்தபாரத்தோடும் நற்செய்தி இதுவரை எட்டாத மற்ற இடங்களுக்கும் தனது பணியை விரிவு செய்து கொண்டார்.சென்னை மாநகருக்கும் அண்டை நகரமாகிய கடலூருக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டுகிறிஸ்தவல்லாதவருக்கு நற்செய்தியை பிரசங்கித்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேவையானஆன்மீக போதனைகள் தந்தும் வந்தார். இலங்கையில் அருட்பணிக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறு அங்கும்அவர் விஜயம் செய்தார். அங்கு வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு போதக விசாரணைத் தர திட்டம் வகுத்தார். ஆனால்இந்த திட்டங்கள் பின் வந்த மிஷனரிகளால் தான் நிறைவேற்ற முடிந்தது. இவ்விதமாக தமிழகத்தின் பலபகுதிகளிலும் இலங்கையிலும் ஆரம்பித்து வைத்த அருட்பணி பின்னர் ஏனைய மிஷனரிகளால் விரிவானமுறையில் செயல்படுத்தபட அனுகூலமாயிருந்தது. 


சீகன்பால்க் சிறையிலிடப்ப‌டுதல்: 

டென்மார்க் குடியமைப்பின் ஆளுநராகிய ஹாஸியஸ் மிஷனரிகளை ஒடுக்கும் எண்ணத்துடன் கோட்டையில்தன்னை வந்து சந்திக்குமாறு 1701 ம் ஆண்டு நவம்பர் மாதம் சீகன்பால்க்கை அழைத்தார். அவரை அழைத்து வரஇராணுவம் மிஷனரி இல்லத்தை நோக்கி விரைந்தது. முழங்காலினின்று சீகன்பால்க் ஜெபித்துக் கொண்டிருந்தபடியால் பல மணி நேரம் இராணுவத்தினர் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொறுமையிழந்த இராணுவ தளபதிஅவரை சபித்து ஜெபத்தை நிறுத்த வைத்து தன்னோடு அழைத்துச் சென்றான். 

ஆளுநர் ஹாஸியிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்பவராகவும் நீதிபதியாகவும் செயல்பட்டார். சீகன்பால்க்கிற்குவிரோதமாக எந்த சாட்சியும் நிறுத்தப்படவோ விசாரிக்க‌ப்ப‌ட‌வோ இல்லை. அவ‌ரை கேட்ட‌போது இயேசுகிறிஸ்துவைப் போன்று அமைதியாய் இருந்தார். இறுதியாக‌ அவ‌ரைக் கைது செய்து சிறையில‌டைக்க‌ ஹாஸிய‌ஸ்உத்த‌ர‌விட்டார். 

மிக‌வும் கொடூர‌மாக‌ வெப்ப‌மிகுந்த‌ அறையில் சீக‌ன்பால்க் சிறைவைக்க‌ப்ப‌ட்டார். அவ‌ர‌து சிறைக் கோட்டைச‌மைய‌ல‌றைக்கு அடுத்து அமைக்க‌ப்ப‌ட்டு ச‌மைய‌ல‌றை வெப்ப‌மும் சூரிய‌ வெப்ப‌மும் அவ‌ரை வெகுவாய்வாட்டிய‌து. அவ‌ர‌து ச‌க‌ மிஷ‌ன‌ரியாகிய‌ புளூட்சோ அவ‌ரை ச‌ந்திக்க‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. எழுத‌ பேனாவும்காகித‌மும் கூட‌ அவ‌ருக்கு ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ர் த‌ன‌து திரும‌றை த‌மிழாக்க‌த்தை தொட‌ர‌முடியாம‌ற் போயிற்று. 

அமைதியினால் அவ‌ர‌து மிஷ‌ன‌ரிப் ப‌ணி பார‌மும் வாஞ்சையும் அவிக்க‌ப்ப‌ட‌வும், த‌னிமையின் கொடுமையும்கொடும் வெப்ப‌மும் அவ‌ர் உட‌லிலிருந்த‌ நோய் எதிர்ப்பு த‌ன்மையையும் பெல‌னையும் முற்றிலும் அழித்துபோட‌வும் எதிரிக‌ள் ச‌தி செய்த‌ன‌ர். இருப்பினும் புளுட்சோவைப் போல் சீக‌ன்பால்க்கும் துவ‌ண்டு போகாதும‌ன‌தைரிய‌த்துட‌ன் பாட‌லாலும் ஜெப‌த்தாலும் சிறையைத் தூய்மைப்ப‌டுத்தினார். இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள் திர‌ள் ஹாஸிய‌ஸ்ஸிற்கு எதிராக‌ எழும்பிய‌தால் சிறைத‌ண்ட‌னையை நீண்ட‌நாள் அவ‌ர்நீடிக்க‌ முடிய‌வில்லை. சீக‌ன்பால்க்கின் மேல் பொதும‌க்க‌ள் வைத்திருந்த‌ பாச‌ம், ம‌திப்பு, ம‌ரியாதைக்குஅள‌வில்லை. 1709 ம் ஆண்டு மார்ச் 26 ம் நாள் நான்கு மாத‌ சிறைவாச‌த்தின் பிற‌கு சீக‌ன்பால்க் விடுத‌லைச்செய்ய‌ப்ப‌ட்டார். சிறையிலிருந்து வெளிவ‌ந்த‌வுட‌ன் ப‌ல‌ மாறுத‌ல்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. சிறையில் அவ‌ர் அனுப‌வித்த‌பாடுக‌ள் தேவ‌ன் அவ‌ருக்கு ந‌ன்‌மை ப‌ய‌க்கும்ப‌டி செய்தார். அவ‌ர் பொதும‌க்க‌ளின் மிகுந்த‌ம‌ரியாதைக்குரிய‌வ‌ரானார். 


திரும‌ண‌மும் குடும்ப‌ வாழ்வும்: 

ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் இந்திய‌வில் அருட்ப‌ணி செய்த‌பின் சீக‌ன்பால்க் விடுமுறைக்கு ஐரோப்பா சென்றார். அங்குடென்மார்க் ம‌ன்ன‌ரை ச‌ந்தித்து த‌ன‌து வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரி ப‌ணித்திட்ட‌ங்க‌ளை விவ‌ரித்து தேவையான‌ ஆத‌ர‌வைக்கோரினார். அவ‌ரும் ஐரோப்பாவில் இந்திய‌ அருட்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் ப‌ண‌த்தொகையைத் திர‌ட்டினார். 

ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு அவ‌ர் விஜ‌ய‌ம் செய்த‌போது ம‌ரியா டார‌த்தி என்ற‌ இள‌ம் பெண்ணை ச‌ந்தித்தார்.ம‌ரியாவின் க‌ல‌க‌ல‌வென்ற‌ சிரித்த‌ முக‌ அழ‌கும் ந‌ற்குண‌மும் அவ‌ரை வெகுவாய்க் க‌வ‌ர்ந்த‌ன‌. ம‌ரியாவும்சீக‌ல்பால்க்கை விரும்பி த‌ன‌து விருப்ப‌த்தை தெரிவிக்க‌ விரைவில் திரும‌ண‌ம் 1715 ம் ஆண்டு டிச‌ம்ப‌ரில்ந‌டைபெற்ற‌து. திரும‌ண‌ம் ஆன‌தும் இருவ‌ரும் ஹால‌ந்து ம‌ற்றும் இங்கிலாந்து வ‌ழியாக‌ இந்தியாவுக்கு ப‌ய‌ண‌ம்மேற்கொண்டு 1716 ம் ஆண்டு ஆக‌ஸ்ட் மாத‌ம் சென்னை வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அவ்விருவ‌ருக்கும் இந்திய‌ ம‌க்க‌ளின்அன்பான‌ வ‌ர‌வேற்பு காத்திருந்த‌து. த‌மிழ் ம‌க‌ளீர் த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை மிஷ‌ன‌ரியின் ம‌னைவியிட‌ம் த‌ய‌க்க‌மின்றிப‌கிர்ந்து ஆலோச‌னைப் பெற்ற‌ன‌ர். இவ்வித‌ம் இருவ‌ரும் ஒரு அணியாக‌ ம‌ற்ற‌ மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌ங்க‌ளோடு சிற‌ப்புமிக்க‌ அருட்ப‌ணியாற்றி வ‌ந்த‌ன‌ர். 


மிஷ‌ன் நிர்வாக‌ குழுவின் த‌வ‌றான‌ திட்ட‌ம்: 

கிறிஸ்டிய‌ன் வென்ட் (Christian Went) என்ற‌ செய‌ல‌ரின் த‌லைமையில் இய‌ங்கிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழு மிஷ‌ன‌ரிக‌ளின்ந‌டைமுற‌க்கு க‌ட்டுப்பாடுக‌ளைக் கொண்டு வ‌ந்த‌து. 

அவையாவ‌ன‌: 
அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் கால‌த்தைப் போன்று மிஷ‌ன‌ரிக‌ள் எந்த‌ பொருள் உத‌வியுமின்றி நாடெங்கிலும்சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கித்து அருட்ப‌ணியாற்ற‌ வேண்டும். மிஷ‌ன‌ரிக‌ள் குடும்பமாக‌ ஓர் இட‌த்தில் த‌ங்கிஅருட்ப‌ணியாற்ற‌ கூடாது. 

புதிதாக‌ கிறிஸ்த‌வ‌ரானோர் த‌ங்க‌ளை திருச்ச‌பையாக‌ அமைத்துக்கொண்டு த‌ங்க‌ள் சொந்த‌ செல‌வில் ஆல‌ய‌ம்ம‌ற்றும் பாட‌சாலைக‌ள் க‌ட்ட‌ வேண்டும். சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டிய‌ மிஷ‌ன‌ரிக‌ள் ஆல‌ய‌ம் க‌ட்டுத‌ல், ப‌ள்ளிக‌ள் நிறுவித்த‌ல் போன்ற‌காரிய‌ங்க‌ளில் ஈடுப‌ட‌க்கூடாது. 

இப்ப‌டி த‌வ‌றாக‌ எடுத்த‌ முடிவுக‌ள் மிஷ‌ன‌ரிக‌ளுக்கும் மிஷ‌ன் செயல‌ருக்கும் இடையில் பெரும் நெருக்க‌டியைஉருவாக்கிற்று. த‌ர‌ங்க‌ம்பாடியில் ந‌ல்ல‌ வீடுக‌ளில் மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌மாக‌ வாழ்வ‌து, துற‌வியாய் வாழ்ந்த‌செய‌ல‌ருக்கு அறுவ‌றுப்பாய்த் தோன்றிற்று, விலைவாசி உய‌ர்வினால் மிஷ‌ன‌ரிக‌ள் த‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ ப‌ண‌உத‌வி குடும்ப‌ செல‌வுக‌ளை கொண்டு ச‌ந்திக்க‌ முடியாது போன‌து இவ‌ருக்கு கோப‌த்தை மூட்டின‌து. 

ப‌ல‌ மிஷ‌ன‌ரிப் ப‌ணித்திட்ட‌ங்க‌ளிலும் அத‌ன் செய‌ல் முறையிலும் சீக‌ன்பால்க் ஓர் முன்னோடி மிஷ‌ன‌ரியாக‌த்திக‌ழ்ந்தார். அஞ்சாநெஞ்ச‌த்துட‌ன் த‌ன‌க்கு முன் அறிவிக்காம‌ல் மாற்றிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழுவின்கொள்கைக‌ளைக் குறித்து ச‌ட்டை செய்யாம‌ல் மிஷ‌ன‌ரி ஊழிய‌த்தின் ப‌ரிமாண‌த்தை விரிவாக்கினார். இப்ப‌டியாக‌ ப‌ல‌மிஷ‌ன‌ரி பிர‌ச்ச‌னைக‌ளில் த‌ன‌து அணுகுமுறை ச‌ரியே என்று நிரூபித்தார். 


எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தலின் மத்தியில் மிஷனரிப் பணி: 

பல முன்னோடி மிஷனரிகளைப் போல சீகன்பால்க்கும் புளூட்சோவும் முடிவில்லாக் கஷ்டங்களை அனுபவித்தனர்.தரங்கம்பாதியிலிருந்த டென்மார்க் சமுதாயத்தாரின் எதிர்ப்பு, பாதிரிகளின் விரோத மனப்பான்மை, மிஷன் நிர்வாககுழுவிற்கும் இவர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கும்இருந்த கருத்து வேறுபாது மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கு அதிக பாடுகளைத் தந்தன.இருப்பினும் தான் அனுபவித்த பாடுகளின் காரணமாய் தன் அருத்பணியைக் கைவிடவில்லை. டென்மார்க் ஆளுநரின் ஓயாத துன்புறுத்தலின் போது அவர் காட்டிய அஞ்சாமை, தளராமை நம்மை வியப்பில்ஆழ்த்துகிறது. இயேசு கிறிஸ்து மேல் சீகன்பால்க் கொண்ட திட நம்பிக்கை, மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கும்அவரது அஞ்சாமை, தியாக வாழ்க்கை ஜெர்மனியிலிருந்த நண்பருக்கு அவர் எழுதிய ஓர் கடிதத்திலிருந்துவெளிப்படுகிறது. 

"எங்கள் பண இழப்பிற்கு பிறகு ஆளுநரும் அவரது இரகசிய மன்றமும் எங்களுக்கு எதிராகவும் எங்கள்திருச்சபைக்கு விரோதமாகவும் கொடுங்கோலராய் செயல்பட்டு நாங்கள் கட்டியெழுப்பிய அனைத்து பணிகளையும்திருச்சபையையும் அழித்து விடுவதாக பயமுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையில் எங்கள்ஜீவனைக் குறித்த நிச்சயமற்று மிகுந்த மனபாரத்துடன் காணப்பதுகிறோம். இருப்பினும் தேவன் எங்களைக்கைவிடாது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களைத் தேற்றி உற்சாகப்படுத்தி சத்தியத்தை எந்தவிதகலக்கமுமின்றி சந்தோஷமாய் அறிவிக்கவும் எங்கள் இரத்தத்தைச் சிந்தி அதனை உறுதிப்படுத்தவும் தயங்காமல்செயல்பத உதவுகிறார்." 


மிஷனரிப் பணித் திட்ட‌ங்க‌ள்: 

பேராய‌ர் ஸ்டீப‌ன் நீல் கிறிஸ்த‌வ‌ மிஷ‌ன் வ‌ர‌லாறு என்ற‌ த‌ன‌து ஆங்கில‌ நூலில் கீழ்காணும் ஐந்து கொள்கைக‌ள்சீக‌ன்பால்க்கின் மிஷ‌ன‌ரி அருட்ப‌ணியில் காண‌முடிகிற‌து என்று கூறுகிறார். 

1. திருச்ச‌பையும் ப‌ள்ளிக்கூட‌மும் இணைந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும். இயேசு கிறிஸ்துவில் விசுவாச‌ம் வைக்கும் அனைவ‌ரும் தேவ‌னுடைய‌ வார்த்தையை (திருமறை)வாசிக்கும் ஆற்ற‌ல் பெற்றிருக்க‌ வேண்டும். இத‌ற்கென‌ அனைத்து கிறிஸ்த‌வ‌ரும் (திருச்ச‌பை) ஆர‌ம்ப‌க‌ல்வியாவ‌து ப‌யில‌ வேண்டும். இந்நோக்கோடு ப‌ள்ளிக்கூட‌மும் அநாதைக‌ள் காப்ப‌க‌மும் சீக‌ன்பால்க்கால்ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ முய‌ற்சி முன்னோடி ந‌ட‌வ‌டிக்கையாயிருந்தும் வெற்றியாய் அமைந்த‌து.கிறிஸ்த‌வ‌ இளைஞ‌ர்க‌ளுக்குத் தேவையான‌ ப‌யிற்சித் த‌ந்து திருச்ச‌பையின் ப‌ணியிலும் அர‌சுநிர்வாக‌த்திலும் ப‌ல‌ வேலை வாய்ப்புக‌ள் கிடைக்க‌ச் செய்தார். 

2. கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் திரும‌றையை வாசிக்க‌ வேண்டுமென்றால் அது அவ‌ர்க‌ள் தாய்மொழியில்கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும். தொலைத்தூர‌ பார்வையுட‌ன் புதிய‌ ஏற்பாட்டை த‌மிழாக்க‌ம் செய்து, 1718 ம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார்.ப‌ழைய‌ ஏற்பாட்டிலும் ப‌குதிவ‌ரை மொழியாக்க‌ம் செய்தார். மிஷ‌ன‌ரி அருட்ப‌ணிக்கு திரும‌றை மொழியாக்க‌ப்ப‌ணி அடிப்ப‌டையான‌தென்ற‌ உண்மைய‌ பிற்கால‌த்தில் வில்லிய‌ம் கேரியும், ஹென்றி மார்டினும் உண‌ர்ந்துசெய‌ல்ப‌ட‌ சீர்திருத்த‌ திருச்ச‌பையின் முத‌ல் மிஷ‌ன‌ரியான‌ சீக‌ன்பால்க் அஸ்திபார‌ம் போட்டார் என்றால்மிகையாகாது. 

3. ம‌க்க‌ளின் ம‌ன‌நிலை குறித்து முழுமையான‌ த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் தான் ந‌ற்செய்தி அறிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும். இந்த‌ கொள்கை ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக‌ளையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ந‌ன்கு ஆராய்ந்து ப‌டிக்க‌அடிகோலிட்ட‌து. இந்த‌ ச‌ம‌ய‌த்தை அவ‌ர் ஆழ்ந்து ப‌டித்த‌தின் விளைவாக‌ ம‌ல‌பார் தேவ‌ர்க‌ளின் வ‌ம்ச‌வ‌ர‌லாறு(1867) என்ற‌ நூலை எழுதினார். இந்துக்க‌ளின் ச‌ம‌ய‌ச் ச‌ட‌ங்குக‌ளைக் குறித்து இந்து பூசாரிக‌ளோடுஉரையாடி இந்து ம‌த‌த்தைக் குறித்த‌ செய்திக‌ளை நுட்ப‌மாக‌ அறிந்து கொண்டார். அவ‌ர‌து மிஷ‌ன‌ரிக்கொள்கைக‌ளை அன்றைய‌ முஷ‌ன் நிர்வாக‌க் குழு ஏற்று மெச்சாவிடினும் இன்று இதே மிஷ‌ன‌ரிக்கொள்கைக‌ள் அனைவ‌ராலும் ஏற்று போற்றுத‌ற்குரிய‌தாய் அமைந்துள்ள‌து. 

4. த‌னி ம‌னித‌ன் ம‌ன‌மாற்ற‌ம‌டைந்து இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌து அவ‌ர‌து குறிக்கோளாக‌ அமைந்த‌து: கும்ப‌லாக‌ அல்ல‌து குழுவாக‌ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட‌ நிக‌ழ்ச்சி சீக‌ன்பால்க் கால‌த்தில் இல்லை.எனினும் சீக‌ன்பால்க் செய்த‌ ப‌ணியினால் ப‌ய‌ன்பெற்றோர் வேறு எண்ண‌ங்க‌ளோடு கிறிஸ்த‌வ‌த்தைஏற்றுக்கொள்ள‌ முன் வ‌ந்த‌து பிர‌ச்சனையாயிருந்த‌து. அவ‌ர் செய்த‌ ச‌முதாய‌ப் ப‌ணியின் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள்பெய‌ர‌ள‌வில்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum