தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வரவும் செலவும்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வரவும் செலவும்  Empty வரவும் செலவும்

Sat Feb 08, 2014 11:56 am
மன்னர் ஒருநாள் நகர்வலம் வந்த போது ஒரு ஏழை குடியானவனை கண்டு அவனை நலம் விசாரித்தார்.

'' உனக்கு போதுமான வருமானம் வருகிறதா ?''

"ஓ .. வருகிறதே "

'' எவ்வளவு ?''

'' நாலணா ''

'' நாலணா உனக்கு போதுமா ?'' ''

"போதுமாவா?....அந்த நாலணாவில் தான் சாப்பிடுகிறேன் சேமிக்கிறேன். பழைய கடன் அடைக்கிறேன் தர்மமும் பண்ணுகிறேன் '' என்று சந்தோஷமாக கூறினான் அவன் !

''அட அப்படியா ?'' ஆச்சரியத்துடன் கேட்டார் மன்னர்.

பதிலுக்கு அந்த குடியானவன் , '' ஆம் ...நீங்கள் வேண்டுமானால் என் வீட்டுக்கு வந்து பாருங்கள் !'' என்று சொல்ல, அவனை பின்தொடர்ந்தார் மன்னர்.

வீட்டை அடைந்த குடியானவன் , தன்னிடம் இருந்த நாலணாவை தன் மனைவியிடம் கொடுத்தான். அவள் அதில் அரிசி வாங்கி வந்து கூழ் காய்ச்சி வீட்டிலிருந்த எட்டு பேருக்கும் கொடுத்தாள்

ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மன்னரிடம் விளக்க ஆரம்பித்தான் அந்த குடியானவன்.

அருகேயிருந்த தன் தாய் ,தந்தையரை காட்டி , '' இதோ இவர்கள் என் பெற்றோர்கள் ! சின்ன வயதில் எனக்கு உணவிட்டதால் இவர்களுக்கு நான் கடன் பட்டேன் ! அவர்களுக்கு உணவிடுவதன் மூலம் அந்த கடனை இப்போது அடைக்கிறேன் ''

பின் தன் இரு மகன்களை காட்டி '' இதோ , இவர்களுக்கு நான் அளிக்கும் உணவு சேமிப்பு ! ஆம் எனக்கு வயதான பின் உணவிடுவதன் மூலம் இந்த சேமிப்பை திருப்பி தருவார்கள் ''

பின் அங்கே நின்றிருந்த கணவனை இழந்த தன் சகோதரியையும் , அவளின் மகனையும் காட்டி , '' இதோ ..இவர்களுக்கு இடும் உணவு தான் என்னால் முடிந்த தர்மம் ''

வெகு இயல்பாக கூறிய அந்த குடியானவனை பெருமிதத்துடனும் , வியப்புடனும் நோக்கினார் மன்னர்.

'எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எப்படி நியாயமாக செலவழிக்கிறோம் என்கிற உணர்வே முக்கியம் ' என்கிற உயர்ந்த தத்துவத்தை கற்று கொண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினார் மன்னர்

நன்றி: கருபுடிச்சேரி கொபெருதேவி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum