தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
"ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு " Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு " Empty "ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு "

Fri Oct 07, 2016 8:26 am
"ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு " 14522740_1291659930867866_419251146888213254_n

"ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு "
ஒரு போதகப் போராளியின் கதை 

ரேனியஸ் - திருநெல்வேலி சரித்திரத்தை புரட்டிப் போட்ட ஒற்றைச் சொல். இந்த பூமியில் அவர் வாழ்ந்த காலங்கள் 48 ஆண்டுகள். அதில் சரிபாதியை தமிழ் மண்ணில் செலவிட்டார் .அதில் 18 ஆண்டுகள் நெல்லை சீமையில் நல்ல போர்ச் சேவகனாய் தீங்கநுபவித்து , அங்கேயே கோதுமை மணியாய் விதைக்கப்பட்டார். இந்த 18 ஆண்டுகளில் அவர் நிறுவிய ஆலயங்கள் 371, கல்வி நிலையங்கள் 107, தமிழ் வேதாகமத்தின் மூன்றாவது மொழிபெயர்ப்புக்கு சொந்தக்காரர். தமிழின் முதல் அறிவியல் புத்தகம் எழுதிய முன்னோடி. மெய்ஞானபுரம் , சுரண்டை, நல்லூர், டோனாவூர், அடைக்கலாபுரம், கடாட்சபுரம், சத்திய நகரம், கிருபாபுரம் , அன்பின் நகரம் , இடையன்குளம், ஆசிர்வாதபுரம் என இவர் உருவாக்கிய அடைக்கலப்பட்டிணங்கள் ஏராளம். துண்டு பிரசுர சங்கத்தை நிறுவியவர். ஒருநாள் வருமானத்தை படைத்தல், LCF, கைப்பிடி அரிசி காணிக்கை , இருவர் இருவராக சென்று சுவிசேஷம் அறிவித்தல் என புதிய , புதிய ஊழிய உத்திகளை அறிமுகப்படுத்தியவர். இலக்கிய முயற்சிகள், கருத்தாக்கங்கள் என பட்டியலிட இயலாத சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் மூலம் தான் தென்பாண்டி சீமையில் ஒரு Mass Movement Evangelism சாத்தியமாயிற்று. இவர் காலத்தில் இந்தியா வந்த யூத மிஷினரி Dr.Wolf "Greatest missionary who had appeared since St.Paul" என்று இவரைப் பற்றி சாட்சி பகருகிறார். 

இவரால் ஒரு சமூக கூட்டம் பயன்பட்டதே , அந்த சமூகம் அவரை கொண்டாடியிருக்க வேண்டுமே ? நினைவு சின்னங்கள் நிறுவியிருக்க வேண்டுமே? இல்லை, எல்லோரும் அவரை மறந்தாயிற்று. அயராத உழைப்பு, கண்டிப்பு, போர்க்குணங்கள் நிறைந்த ரேனியஸ் ஒரு மறக்கப்பட்ட மாமனிதனாக மாறிப் போனார். ரேனியஸ் குறித்து நம்மிடம் உருப்படியாக எஞ்சி நிற்பது அவரது மகன் சார்லஸ் ரேனியஸ் 1841-இல் தொகுத்து வெளியிட்ட ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு (Memoir of the Rev.CTE.Rhenius) . அனுதின ஊழிய சம்பவங்களை விரிவாக எழுதிய ரேனியஸ் தன தனிப்பட்ட வாழ்வு குறித்து கொஞ்சமே எழுதினார் என்பது வரலாற்று சோகம். இந்த நாட்குறிப்பை 1976-இல் சுருக்கி "திருநெல்வேலி அப்போஸ்தலன் ரேனியஸ்" எனும் தலைப்பில் வெளியிட்டார் பேரா.D.A.கிறிஸ்துதாஸ். இந்த நூல் இன்றளவும் ரேனியசை நேசிக்கும் திருநெல்வேலி கிறிஸ்தவர்கள் போற்றி பாதுகாக்கும் ஆவணமாக உள்ளது. 

நவம்பர் 5 ஆம் தேதி ரேனியஸ் ஐயரின் பிறந்த நாள் . இந்த நாளினை "Rhenius Day" (ரேனியஸ் தினம்) என கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம். அந்த தினத்தில் ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகளை முழுமையாய், புதிய ஆய்வுகள் , தரவுகள் அடிப்படையில் , புதிய வெளிச்சத்தில் தர முயற்சிக்கிறோம். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் செயலாற்றிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமை, ரேனியஸ் காலத்தில் அவரை வழிநடத்திய ஆவியானவரின் செயலாற்றல் மீண்டும் ஒரு முறை தீவிரமாய் பற்றி எரிந்து மாபெரும் எழுப்புதல் நிகழும் என அவருக்குள் நம்புகிறோம். அந்த எழுப்புதல் தீயை மூட்டிவிடும் தணலாக இந்த முயற்சி அமைய ஆசிக்கிறோம்.

இந்த நூலுக்கான முன் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தேவைப்படுவோர் 9003405043 என்ற எண்ணிலும், ஐக்கிய அரபு குடியரசில் பதிவு செய்ய விரும்புவோர் 054-3604140 என்கிற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வேறு பகுதிகளில் இருப்போர் கீழ்கண்ட இணைய இணைப்பு மூலமும் தொடர்பு கொள்ளுங்கள்.

Https://cterhenius.WordPress.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum