தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 100%
பார்வையிட்டோர்
இறைவன் எப்படி மரிக்கமுடியும்??????? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இறைவன் எப்படி மரிக்கமுடியும்??????? Empty இறைவன் எப்படி மரிக்கமுடியும்???????

on Tue Aug 20, 2013 7:34 am
இஸ்லாம் கல்விக்கு பதில்


இஸ்லாம் கல்வி தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது, அதில் "இயேசு இறைவன் என்றால் அவர் எப்படி மரிக்கமுடியும்?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அக்கட்டுரைக்கான தொடர் பதில்கள் வரிசையில் இதனை முதலாவது பதிலாக நான் முன்வைக்கிறேன். 


இஸ்லாம் கல்வி எழுதியது: 


கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். 

மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. 

அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது. 


பைபிள் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள் 

கேள்வி:

இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்? 


பதில்:

ஒருவர் மரித்தால் அவர் "முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(non-existence)" என்பதே இக்கேள்வியில் மறைந்துள்ள ஒரு செய்தி அல்லது ஊகமாகும். இந்த கேள்வியின் படி, இயேசு மரித்தார் என்றுச் சொன்னால், அவர் முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(ceased to exist), 

இது போல நடக்க வாய்ப்பே இல்லையே, அதாவது இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்படி நிலைக்கும்? மரணம் என்பதின் பொருளை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள், இது தான் பிரச்சனை. 

ஆனால், பரிசுத்த வேதாகமத்தின் படி, மரணம் என்பது, ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான ஒரு பிரிவு மட்டுமே ஆகும். முதல் மனிதனின் பாவத்தினால் இரண்டு வகையான பிரிவுகள் உண்டாயின என்று வேதம் சொல்கிறது. 

முதலாவது "ஆன்மீக மரணம் அல்லது ஆவிக்குரிய மரணம்" ஆகும், அதாவது, இறைவனோடுள்ள ஐக்கியம் அல்லது உறவுமுறை துண்டிக்கப்பட்டு, இறைவனின் அன்பான மற்றும் நெருக்கமான பிரசன்னத்தை இழப்பதாகும். மனிதன் மீது இறைவனின் அன்பு சூழ்ந்து இருப்பதற்கு பதிலாக‌, இறைவனின் கோபம் வியாப்பித்து இருப்பதாகும். இதைத் தான் ஆவிக்குரிய‌ ம‌ர‌ண‌ம் என்றுச் சொல்கிறோம். 


தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 

ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:15-17) 

தேவனுக்கு கீழ்படியாமல், தடுக்கப்பட்ட மரத்தின் கனியை புசித்த காரணத்தினால், ஆதாமும் அவன் மனைவியும் தேவனின் பிரசன்னத்திலிருந்தும், ஏதேன் தோட்டத்திலிருந்தும் துரத்தப்பட்டார்கள். 


பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (ஆதியாகமம் 3:22-24) 

பாவத்தின் காரணமாக உருவான இந்த ஆவிக்குரிய பிரிவினையை வேதம் தொடர்ந்து விவரிக்கின்றது. 

நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; 

அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். (சங்கீதம் 5:4-6)

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார். (சங்கீதம் 66:18)

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59:2)

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். (மீகா 3:4)

தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? (ஆபகூக் 1:13).

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. …சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2:5,Cool


அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். 

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். 

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசியர் 2:1-5).

இயேசுவோடு ஐக்கிய‌ப்ப‌ட்ட‌ விசுவாசிக‌ள் கூட‌ அவ‌ர்க‌ள் ம‌றுபிற‌ப்பு அடைவ‌த‌ற்கு முன்பாக "பாவத்தில் ம‌ரித்த‌வ‌ர்க‌ளாக" இருந்தார்க‌ள் என்று மேலே ப‌டித்த‌ க‌டைசிப் ப‌த்தியில் ப‌வுல் சொல்கிறார். 

அதாவ‌து பாவ‌த்தில் ம‌ரித்த‌வ‌ர்க‌ள் என்றுச் சொன்னாலும், விசுவாசிக‌ள் இன்னும் உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளாகவே இருந்தார்க‌ள். மனிதன் பாவ‌த்தினால் ம‌ரித்தான் என்றுச் சொன்னால், அவ‌ன் இல்லாமல்(அழிந்தே) போய்விடுகிறான் என்று பொருள் அல்ல‌, அத‌ற்கு ப‌திலாக‌, அவ‌ன் அன்பான‌ தேவ‌னோடுள்ள‌ ந‌ட்புறவிலிருந்து பிரிக்கப்பட்டான் என்ப‌து தான் இந்த‌ வ‌ச‌ன‌த்தின் பொருளாகும். 


பரிசுத்த பைபிள் குறிப்பிடும் இரண்டாவது வகையான மரணம் "சரீர மரணமாகும்". இந்த சரீர மரணம் என்பது, சரீரத்திலிருந்து ஆவி/ஆன்மா பிரிக்கப்பட்டு, மற்றும் இந்த சரீரமானது தான் வந்த மண்ணுக்கே திரும்பிவிடும். 

மற்றும் நம்முடைய பாவத்தை சுமந்த இயேசு கிறிஸ்துவும் இந்த இரண்டு வகையான மரணத்தையும் சந்தித்தார், அதாவது தேவனுடன் தன் நட்புறவை நமக்காக இழந்தார், மற்றும் சரீரத்திலிருந்து ஆன்மா பிரிவதையும் அனுபவித்தார். நம்முடைய தொடர் கேள்விகளுக்கான பதிலில் இந்த விவரத்தைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் சிந்திக்கப்போகிறோம். 


ஆக, இந்த இரண்டு வகையான மரணங்களும், ஒருவரை "இல்லாமல் செய்துவிடாது"( Yet, neither types of death results in non-existence or cessation of life). உதாரணத்திற்கு கிழ் கண்ட வசனத்தை பார்க்கவும்: 

நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், 

பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரேயர் 12:22-24) 


அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும்செத்ததாயிருக்கிறது ("As the body without the spirit is dead, so faith without deeds is dead." யாக்கோபு 2:26) 


அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: 

பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். 

அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (வெளி 6:9-11) 

"மரணம்" என்றால் என்ன என்பது பற்றி, கேள்வி கேட்டவரின் புரிந்துக்கொள்ளுதல் பைபிளுக்கு எதிரானது மட்டுமல்ல, அது குர்‍ஆனுக்கும் எதிரானது என்பது தான் மிகவும் முக்கியமான விவரமாகும்(Interestingly, not only is the questioner's definition of death unbiblical, it is also contrary to the Quran:). 

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்(And say not of those slain in God's way, 'They are dead'; rather they are living, but you are not aware. குர்‍ஆன் 2:154) 

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. 

மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள். (குர்‍ஆன் 3:169-170) 


கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் வார்த்தைகளும் இதனையே எதிரொலிக்கின்றன. 

அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். 

அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். (லூக்கா 20:37-38) 

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்வது என்னவென்றால், இயேசு சிலுவையில் மரிக்கும் போது அவர் "முழுவதுமாக இல்லாமல் போகவில்லை". பரிசுத்த வேதம் நமக்கு இவ்விதமாக போதிக்கிறது, 

அதாவது கர்த்தரின் சரீரம் மூன்று நாட்கள் கல்லரையில் இருக்கும் போது கூட, அவரது ஆவி/ஆன்மா தொடர்ந்து உயிரோடு இருந்தது(still consciously alive) மற்றும் வாழ்ந்துக்கொண்டு இருந்தது என்று வேதம் சொல்கிறது. 

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்,மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 

அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:19-22) 

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், 

அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:17-18) 


இயேசு தன்னைத் தானே மரணத்திலிருந்து உயிர்த்தெழ வேண்டுமென்றால் அதற்கு உள்ள ஒரே வழி, அவர் உயிரோடு இருந்தால் தான் முடியும். 

இது நமக்கு இயேசு கல்லரையில் இருந்த மூன்று நாட்களில் அவர் இல்லாமல் போகவில்லை என்பதை நிருபிக்கிறது. இயேசுவின் தெய்வீகத் தன்மை மற்றும் அவரது மனித ஆன்மா அந்த மூன்று நாட்களும் உயிரோடு முழு உணர்வோடு இருந்தது.

ஆக, கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இதுவே. உண்மைத் தேவனாகிய இறைவன், மூன்று நிகரற்ற ஆள்தத்துவத்துடன் எப்போது வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். 

இயேசுவின் சரீரம் கல்லரையில் வைக்கப்படும் போதும் சரி, அந்த சரீரம் கல்லரையில் இருந்த அந்த நாட்களிலும் சரி அவர் உயிரோடு இருக்கிறார். 

அந்த மூன்று நாட்களிலும் கிறிஸ்து உயிரோடு இருந்து, தன் பிதா பரிசுத்த ஆவியானவருடன் மகிமை வல்லமையுடன் உலகத்தை ஆண்டுக்கொண்டு இருந்தார். 

இஸ்லாம் கல்வி தள கட்டுரைகளும், ஈஸா குர்ஆன் பதில்களும் 

நடப்பது புனித போர்

காதுகளில் எங்கும் ஒலிப்பது குண்டு வெடிப்பு, ஆங்காங்கே சிதறிகிடக்கும் மனித உடல் உறுப்புகள், இரத்தம் தோய்ந்த தரைகள், சைரன் ஒலி எழுப்பி செல்லும் ஆம்புலன்சின் ஓசைகள் இப்படிப்பட்ட தான ஒரு சம்பவம்தான் இங்கு நடந்தது மேலே வாசியுங்கள்

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌… 

நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல் 

செப்டம்பர் 11 ஆம் தேதிய அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். 

சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அதுபோன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் - முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன். 


உங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். 

ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள். 


இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம். 


ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது. 


இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். 

ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே. 


பைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. 

பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தித்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார். 


மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக்கொண்டு ஜெயித்தார்(He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். 

அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத் , அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே நடத்தப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். 

அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார். 


அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு அநீதியான விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட‌ அந்த இரவில் கெத்சமனே தோட்டத்தில் அவ‌ர‌து ப‌கைவ‌ர்க‌ள் அவ‌ர‌ச் சூழ்ந்துகொண்டார்க‌ள். 

அச்சந்தர்ப்பத்தில் அவ‌ர‌து ப‌ர‌லோக‌த் தந்தையிட‌ம் அவ‌ர் இராணுவ‌ உத‌வியைக் கூட‌க் கேட்டிருக்க‌லாம் (72,000 தூத‌ர்க‌ள்). ஆனாலும் அவ‌ர் அவ்வாறு செய்ய‌வில்லை.( இஞ்ஜில் ம‌த்தேயு 26:47 முத‌ல் 26:54 வ‌ரை) 

"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 

அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். 

இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 

அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். 

அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். 

நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." 

முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார். 


தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொள்கிறார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக்கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார். 


அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. 

கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்கவேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழவேண்டுமென்றார். 


கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. 

இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது. 

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; 

நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. 

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4) 

உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். 

நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். 

நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். 

அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. 

பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான். 


இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. 

இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது. 


நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது: 

"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்." லூக்கா 6:27,28

இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்துகாட்டியது போல் வாழத் தவறிவிட்டோம். 


உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின்பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். 

வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப்பெற்றது என நீங்களே அறிந்துகொள்ளுங்கள் 

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" ( மத்தேயு 11:28 – 30 ) 


நன்றி: http://christhavam.blogspot.in
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum