தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சீன மன்னன் ஷி ஹூவாங்டி உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை !!!

on Tue Jul 30, 2013 8:03 pm
உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.

ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி ‘முதல் பேரரசர்’ என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் ‘பியூடல் சிஸ்டம்’ எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.

அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.

இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் ‘கன்பூசியஸ் சித்தாந்தம்’ உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.

வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.

சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் ஷி ஹூவாங்டியின் ‘சின்’ பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான்.நன்றி: வேர்ல்ட வைல்டு....
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சீன மன்னன் ஷி ஹூவாங்டி உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை !!!

on Thu Jul 02, 2015 2:13 am


சீனப்பெருஞ்சுவர் - ஆர்க்கிடெக்ட் அதிசயங்கள்

சீ னப் பெருஞ்சுவரைப் பற்றி உங்களுக்கு தெரிந்த, தெரியாத விவரங்களை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு உலகம் முழங்கும் சீனப்பெருஞ்சுவர் பற்றிய சில கேள்விகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1. இதை கட்டிய ராஜாவுக்கு குறைஞ்ச ஆயுசாமே?
2. பீரங்கிகளால் கூட தகர்க்க முடியாத அளவிற்கு ரொம்ப ஸ்ட்ராங்கா?
3. சந்திரனிலிருந்து பார்த்தால் கூட சீனப்பெருஞ்சுவர் பளிச்சென்று ஒரு கோடு போல தெரியும் என்கிறார்களே?

இதற்கெல்லாம் விடை கடைசியாய் இருக்கிறது. முதலில் சீனப்பெருஞ்சுவரைப் பார்ப்போம். 

உலக நாகரிகத்தின் மூத்த பிள்ளை என்றே சீனாவைச் சொல்லலாம். கிறிஸ்து பிறப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன நாகரீகம் உயர்வு நிலையில் இருந்தது. அப்பொழுதே அவர்கள் கட்டுமானப் பணிகளில் பெயர் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள். ஆனால், அதே சமயம் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டும், எதிரிகளுக்கு பயந்தும் வாழ்ந்து வந்தார்கள். கி.மு.247 முதல் கி.மு.221 வரை சீனப் பேரரசராக இருந்த கின்-ஷி- ஹுவாங் (Qin-Shi-Huang) கூட சற்று பயந்தவர்தான்.
சீனாவின் வடக்கு பகுதியில் இருந்த மங்கோலியர்கள் சீனாவிற்குள் நுழைந்து விடப் போகிறார்கள் என்று பயந்து போய் சீனாவிற்கும், மங்கோலியாவிற்கும் இடையே பெரிய சுவரைக் கட்ட ஆரம்பித்தார். தன்னுடைய 26 வருட அரச வாழ்க்கையில் பெரும் பகுதியை இப்பணியிலேயே செலவு செய்தாராம். பல்வேறு காலப்பகுதிகளில் கல்லாலும், மண்ணாலும் பல பகுதிகளாகக் கட்டப்பட்டு, பேசப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பதற்கு அன்று. எதிரிகள் குதிரைகளைக் கொண்டு வராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். இவருக்குபின் வந்த மற்ற சீனப் பேரரசர்களும் இந்த பணியையே தலையாய பணியாக மேற்கொண்டனர்.

முதலில் இச்சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட்ட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப் பிடிக்கக் கூடியனவாக இருந்தன. பின்பு, வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும் திருத்த வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன.

உலகின் நீளமான கட்டுமானம் என்ற பெயரோடு நீண்ட காலமாக கட்டப்பட்ட கட்டுமானம் என்ற பெயரையும் சீனப்பெருஞ்சுவர் பெற்றிருக்கிறது. 
1. கிமு 208 (கின் வம்சம்)
2. கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்)
3. 1138-1198 (பத்து வம்சங்கள், ஐந்து அரசுகளின் காலம்)
4. 1368 (மிங் வம்சம்)
என காலத்திற்கு காலம் அவ்வப்போது இக்கட்டுமானம் கட்டப்பட்டு வந்திருக்கிறது.

இப்பெருஞ்சுவர் யாலு நதியிலுள்ள கொரியா உடனான எல்லையிலிருந்து கோ பாலைவனம் வரை நீண்டிருப்பதாக கணிக்கப்படுகிறது. மிங் வம்சத்தினர் கட்டிய பெருஞ்சுவர் கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங் ஹீவாங்டாவோவில் போஹாய்குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. என்பது மாகாணங்களையும், நூறு கவுண்டிகளையும் கடந்து, மேற்கு முனையில் வடமேற்கு கன்ஷூ மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. 

பண்டை கால சீன அரசு சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக் கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. 
கட்டிடப் பொருள்கள் செங்கற்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னர் பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்ச காலத்தில் சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக் கூடியவையாக இருந்ததுடன் மண் சுவர்களை விட அதிக காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது.

உலக அளவில் உள்ள சுற்றுலா தளங்களில் சீனப் பெருஞ்சுவருக்கு எப்பொழுதுமே ஒரு தனி மவுசு உண்டு. சீனா தனது பலத்தை மக்கள் தொகையில் அல்ல, பொருளாதாரத்திலும், கட்டுமானத்திலும் காட்டி வருகிறது என்பது பெரும்பாலோரின் கருத்தாகும். இதை அந்நாடு இப்பொழுது அல்ல கின்-ஷி-ஹுவாங் காலத்திலிருந்தே நிரூபித்து வருகிறது என்பதற்கு சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதும்.
சரி, இப்போது துவக்கத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலைகாண்போம்.

1.உண்மைதான். கின் - ஷி - ஹு வ ா ங் கி.மு. 259 முதல் கி.மு. 210 வரையே இருந்தார். இது அந்நாளைய சீனர்களின் ஆயுளை விட 21 வருடங் க ள் கு ைற வு .
2.அதெல்லாம் சும்மா. பீரங்கிகள் கண்டு பிடிக்கப்படாத கால கட்டத்தில்தான் இப்பெருஞ்சுவரின் ஏராளமான பகுதிகள் கட்டப்பட்டன. ஆகவே பீரங்கிகளின் வலிமை பற்றி இவர்கள் நினைத்துப் பார்க்க சாத்தியமில்லை.
3. இது உண்மைதான் என்று உலகிற்கு சீனா நெடுநாள் வரை எடுத்துரைத்து வந்தது. ஆனால், இது பொய்யான தகவலாகும். சந்திரனிலிருந்து பார்த்தால் மனிதனால் கட்டப்பட்ட எந்த கட்டுமானமும் கண்ணுக்கு தெரியாது.
1938-ல் ரிச்சர்ட் ஹலிபர்டன் எழுதிய அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் என்கிற நூலில் சந்திரனிலிருந்து பார்க்கக் கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ்சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்து பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன் சீன பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது.

ஆனால், சீனப்பெருஞ்சுவரை சந்திரனிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல. எனினும் தாழ்வான பூமியை சுற்றும் சுற்றுப் பாதையிலிருந்து அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மட்டுமே இது வெறும் கண்ணுக்கு தெரியக் கூடும். சீனப் பெருஞ்சுவர் என்பது நெடுஞ்சாலைகள், விமான ஓடு பாதைகள் போன்றே சில மீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. எனவே, இதை விண்வெளி பாதையிலிருந்து பார்க்க முடியும் என்பது தவறான செய்தியாகும்.

- பா. சுப்ரமண்யம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum