தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மேதைகளின் வாழ்க்கையில்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty மேதைகளின் வாழ்க்கையில்...

Fri Jul 19, 2013 9:23 am

மேதைகளின் வாழ்க்கையில்....
.....................................................

நாம் மனித மாமிசம் உண்டவர்கள்....
...............................................................

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் மகாத்மா காந்தி, 

''பசுவின் பாலைக் குடிக்காதீர்கள். 

அது மாட்டுக் கறியின் சாறு'' என்றார். 

உடனே ராதாகிருஷ்ணன்,

''அப்படியானால், நாம் எல்லோருமே மனித மாமிசம் உண்டவர்கள்தான்'' என்றார்.

''எப்படி?'' என்று கேட்டார் காந்திஜி. 

''நாம் அனைவரும் தாயின் பால் குடித்துதானே வளருகிறோம்.

அதை மனித மாமிசத்தின் சாறு என்று கூறலாம் அல்லவா?'' 

என்றார். 

காந்திஜி பதில் சொல்லாமல் அமைதியானார்.

உடுமலை.சு.தண்டபாணி

Visit our Page -► தமிழால் இணைவோம்


மேதைகளின் வாழ்க்கையில்... 1004880_632851296733124_753249858_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Fri Jul 19, 2013 9:27 am

நானும் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்..
.......................................................................................

சர்ச்சில், இங்கிலாந்து பிரதமராக இருந்த நேரம். 

மனநல மருத்துவமனை ஒன்றை பார்வையிட சென்றார்.

அப்போது மன நோயாளி ஒருவர், 

நீங்கள் யார் என்று சர்ச்சிலைப் பார்த்து கேட்டார். 

''நான் பிரதமர்'' என்றார் சர்ச்சில். 

அதைக்கேட்டதும் அந்த மன நோயாளி பலமாக சிரித்தார். 

''இங்கே வந்த புதிதில் நானும் இப்படித்தான் நானும்,

பிரதமர், 

ஜனாதிபதி ,

என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

போகப்போக குணமாகிவிடும்'' என்றார். 

அதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டார் சர்ச்சில்.

உடுமலை.சு.தண்டபாணி



மேதைகளின் வாழ்க்கையில்... 998543_632848883400032_1844329267_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Mon Dec 22, 2014 9:08 pm
உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே.
பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர், ஒரு புத்தகக்கடை வைத்திருந்தார். அன்று அவருக்கு முக்கியமான பணி. விற்பனையைக் கவனிக்கும்படி தனது பணியாளரிடம் சொல்லி விட்டு, தனது அறையில் இருந்து வேலையைப் பார்க்கத் துவங்கினார்.
அப்போது ஒரு வாடிக்கையாளர் வந்தார். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்துக்குப் பின் ஒரு புத்தகத்தை எடுத்தார்.

விற்பனையாளரிடம் அதன் விலை என்ன என்றார்.
"ஒரு டாலர்'' என்றார் விற்பனையாளர்.
"விலை அதிகமாக இருக்கிறதே'' என்றவர், இன்னொரு புத்தகத்தைத் தேடி எடுத்தார். அதன் விலையைக் கேட்டார்.
"இதுவும் ஒரு டாலர் தான்,'' என்ற விற்பனையாளரிடம்,"தம்பி! இதன் விலை தொடர்பாக, நான் உங்கள் முதலாளியிடம் பேச வேண்டும். அவரை வரச்சொல்லுங்கள்,'' என்றார்.

"ஐயா! அவர் முக்கியப் பணியில் இருக்கிறார். தங்களிடம் பேசும் அளவுக்கு நேரமில்லை. நீங்கள் இந்த விலையைக் கொடுத்து புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார்.
விற்பனையாளரிடம் கடுமையாக வாதாடி, உரிமையாளர் இங்கே வந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்தார்.
வேறு வழியின்றி ஊழியர் பிராங்க்ளினிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.
பிராங்க்ளின் வெளியே வந்தார்.
"ஐயா! இந்த புத்தகம் எனக்கு வேண்டும். ஒரு டாலர் என்பது அதிகமாக இருக்கிறது. குறைத்துச் சொல்லுங்கள்,'' என்றார். பிராங்க்ளின் மறுத்தார்.
சிறிதுநேரம் வாக்குவாதம் தொடர்ந்தது.
"கடைசியாக இதன் விலையைக் கூறுங்கள்,'' என்றார் வந்தவர்.
"ஒரு டாலர் 25 சென்ட்.'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
"நான் குறைக்கச் சொன்னால் நீங்கள் உயர்த்திச் சொல்கிறீர்களே! எதற்கு?'' என்றார்.
"புத்தகத்தின் விலை ஒரு டாலர் தான். நான் நேரத்தைப் பொன்னாக மதிப்பவன்.
என் பணியை இவ்வளவு நேரம் கெடுத்தீர்களே! அதற்கு 25சென்ட்,'' என்றார் பிராங்க்ளின்.
வந்தவரோ விடாக்கண்டன். குறைத்தே ஆக வேண்டுமென அவரிடம் வாதிட, "இரண்டு டாலர்'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளர் கோபம் கொப்பளிக்க நின்ற போது, "ஏன் மேலும் உயர்த்தினீர்கள்?'' என்றார்.
"நான் நேரத்தின் அருமையை உணர்ந்தவன். நீங்கள் உணரவில்லை. அதற்காகத்தான் இந்த விலை உயர்வு,'' என்றார்.
வந்தவர் இரண்டு டாலரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே. பணக்காரனாவதற்கு ஒரே தகுதி காலத்தின் அருமையை உணர்வது தான்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Mon Dec 22, 2014 9:11 pm
நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்?

1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார், “மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!” 


அதற்கு காமராஜர் சொன்ன பதில், “அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?”
பெருந்தலைவர் காமராஜ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Fri Mar 13, 2015 3:55 pm
''எம்.ஆர்.ராதா மிகுந்த முரட்டு சுபாவம் கொண்டவராமே?''
''அந்த முரட்டுத்தனத்தில் ஓர் உண்மை இருக்கும். 1954-ம் வருடம் திருச்சி தேவர் ஹாலில் நடந்த 'கீமாயணம்’ நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டபோது, எம்.ஆர்.ராதா செய்த விளம்பரம், 'என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராக இருந்தாலும் கண்டிப்பாக வரவேண்டாம்; அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்து மனம் புண்பட்டால், அதற்கு நான் ஜவாப்தாரி அல்ல!’
நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் ராதா மைக்கில் சொன்ன அறிவிப்பு, 'உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டும் நாடகம் பார்க்க வரலாம்!’ இத்துடன் இன்னோர் அறிவிப்பையும் செய்தார். 'இந்த நாடகத்தில் தவறு இருந்தால், என்னைத் திருத்திக்கொள்ள நான் தயார். நாடகம் சரியாக இருக்குமானால், நீங்கள் உங்களைத் திருத்திக்கொள்ளத் தயாரா?’
மனசாட்சிக்கு நேர்மையாக நடந்துகொள்பவர்கள், மற்றவருக்கு கோபக்காரராகத்தான் தெரிவார்கள்!''
நானே கேள்வி... நானே பதில்
ஆனந்த விகடன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Fri Mar 13, 2015 7:58 pm
தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.
"ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே, அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.
மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.
அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.
"அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.
"அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.
அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.
இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Fri Mar 13, 2015 8:11 pm
'' 'கலைஞர்கள் குழந்தைகளைப் போல' என்று சொல்லப்படுவது உண்மைதானா?''
''இந்திய - சீனப் போர் நடைபெற்ற சமயம்... தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் எல்லைப்புறப் பகுதியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், கலைஞர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துப் பாராட்டினார். அந்தப் பாராட்டைக் கேட்டு நெகிழ்ந்துபோன நடிகர் சந்திரபாபு, சடாரென்று சோபாவில் அமர்ந்திருந்த ராதாகிருஷ்ணனின் மடி மீது தாவி உட்கார்ந்து, 'நீ கலைஞன்டா கண்ணு!' என்று தாடையைப் பிடித்துக் கொஞ்சினாராம். சுற்றியிருந்தவர்களுக்கோ அதிர்ச்சி. ஆனால், ராதாகிருஷ்ணனோ இயல்பாகச் சந்திரபாபுவின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டாராம். உண்மையான கலைஞர்கள் தன்னிலை மறந்து சமயங்களில் குழந்தைகளைப் போல நடந்துகொள்வதுண்டு என்பதற்கு சந்திரபாபு ஓர் உதாரணம்!''
- கே.சீதாராமன், சென்னை-45.
நானே கேள்வி.. நானே பதில்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Wed Jun 17, 2015 8:25 am
வறுமையிலும் நகைச்சுவை தோன்றுமா?'

''பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஒருநாள் இரவு திருடன் நுழைந்துவிட்டான். மேஜை, அலமாரி என்று எங்காவது பணமோ, நகையோ கிடைக்குமா என்று அறையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு அலசத்தொடங்கினான். 


தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த பால்சாக் இதைக் கவனித்துவிட்டார். பால்சாக் சிரிப்பதைக் கண்ட திருடன், ''ஏன் சிரிக்கிறாய்?'' என்று எரிச்சலுடன் கேட்டான். 


சிரித்தபடி பால்சாக் சொன்னார், ''நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் தேடலாம் என்று இவ்வளவு சிரமப்படுகிறாயே'' என்றார்!

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Fri Jul 10, 2015 1:47 pm
அரிய சுவையான தகவல்கள்:

1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.
Cool வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.
Sponsored content

மேதைகளின் வாழ்க்கையில்... Empty Re: மேதைகளின் வாழ்க்கையில்...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum