தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பாஸ்டர்.சுந்தரம் (1909-1989) Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

பாஸ்டர்.சுந்தரம் (1909-1989) Empty பாஸ்டர்.சுந்தரம் (1909-1989)

Wed Jun 26, 2013 6:49 am
பாஸ்டர்.சுந்தரம் (1909-1989) 485478_581398141905692_475827524_n

அநாதி கிருபையின் இரகசியம்

பாஸ்டர்.சுந்தரம் (1909-1989)

என்னுடைய (பாஸ்டர்.சுந்தரம்) ஊழியத்தின் தொடக்க நாட்களில் நான் தேவனுடைய ஆவியானவரால் என்னை நானே அடக்கியாண்டுக்கொள்ளும்படி நடத்தப்பட்டேன். தேவனுடைய கிருபையினால் இன்றியமையாத் தேவைகளையேயன்றி ஏனைய எல்லாத் தேவைகளையும் குறைத்துக்கொண்டேன். வாலிபனாக இருந்த அந்நாட்களில் மூன்றுவேளை நன்றாய் சாப்பிட்டு வந்தேன். ஆயினும் என்னுடைய ஊழிய ஆரம்பகால முதலிரண்டு ஆண்டு ஊழியத்தில் ஒருவேளை உணவுடன் வாழக்கற்றுக் கொண்டேன். என்னுடைய வயிறும் நாவும் சரியான கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தன. எனக்கு வழங்கப்படும் உணவைக் குறித்துக் குறை சொல்லக்கூடாததென்பதனை நான் ஒரு குறிக்கோளாகக் கொண்டேன்.

* ஒருநாள் ஒரு சகோதரி எனக்கு காபி வழங்கினார்கள். அதில் சர்க்கரை சேர்க்க அவர்கள் மறந்துவிட்டார்கள். சர்க்கரையில்லாக் காபியை முன்னர் நான் குடித்ததே இல்லை. அந்தச் சகோதரியிடம் சர்க்கரை கேட்க வாயெடுத்தேன். ஆயினும் ஆவியானவரோ, எனக்குள் "இல்லை, உனக்குச் சர்க்கரை வேண்டாம்" என்றார். காபியைக் குடிக்காமல் வைத்துவிடலாமென்றுகூட நினைத்தேன். ஆனால் என்னுள் வாழ்ந்த ஆவியானவரோ என்னை விடவில்லை. அதை அப்படியே குடிக்குமாறு தூண்டினார். நான் கீழ்ப்படிந்தேன்!. இவ்வாறு சிறிய சிறிய காரியங்களிலும் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுவது அற்புதமல்லவா!. உடுத்திக்கொள்ளும் உடுப்புகளைத் தெரிந்தெடுப்பதில் நான் வீண்படுத்தியகாலம் மிக அதிகம் உண்டு. நவநாகரீகமாகத் தைக்கும் சிறந்த தையல்காரரிடமே என்னுடைய உடுப்புகளைக் கொடுப்பது என் வழக்கம். ஆயினும் நான் இரட்சிக்கப்பட்ட பிறகோ என்னுடைய உடுப்புகளிலும் மற்றவர்களுக்கு மாதிரியாக விளங்கவேண்டுமென விரும்பினேன். என்னுடைய உடைகளெல்லாம் பருத்தி நூலாடைகள்தான். இரண்டு சட்டை, இரண்டு வேஷ்டியோடு வாழ நான் கற்றுக்கொண்டேன்.

"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு". 1 தீமோ 4:12.

பரிசுத்த பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்துள்ள அறிவுரைகளை நான் கண்டிப்பாக அப்படியே கைக்கொண்டேன். ஏனைய விசுவாசிகளுக்கு நான் ஒரு மாதிரியாக விளங்கவேண்டுமென விரும்பினேன். ஆகவே ஐம்பொறிகளையும், சிந்தனை வாழ்க்கையையும் அடக்கி ஆண்டுக்கொள்ளும்படி தேவன் எனக்குத் துணிவையும் வல்லமையையும் அருளினார். பெருந்திண்டியையும், உலகத்தின் வேஷங்களையும் நான் கைக்கொண்டேனாயின், நான் மற்றவர்களுக்கு நன்மாதிரியாக விளங்கமுடியாதென்பதனை நான் நன்றறிந்திருந்தேன்.

ஒருநாள் நான் கைக்கடிகாரம் ஒன்று விலைக்கு வாங்கினேன். நான் அதனை விரும்பியபடியால், மற்றவர்களுடைய கைக்கடிகாரங்களோடு ஒப்பிட்டு என்னுடையதைக் குறித்து ஒப்பிட்டு சற்று மேன்மைப் பாராட்டத் தொடங்கினேன். ஆயினும் என்னுடைய கைக்கடிகாரம்கூட என்னுடைய ஜெபத்திற்குத் தடையாயிருந்ததென்பதனைக் கண்டுக்கொண்டேன். ஆகையால் அதனைக் கொடுத்துவிட்டு, கையடக்கமான கடிகாரத்தை வைத்துக்கொண்டேன். காலந்தவறாமையை நான் குறியாகக் கொண்டு அதில் பழகினேன். என்னுடைய வாலிப நாட்களில் நான் வாங்கின அந்த கையடக்கமான கடிகாரம் பல ஆண்டுகளுக்கு எனக்கு உதவியாயிருந்தது. மேலும் செப்பனிட முடியாத நிலையினையடைந்தபோதுதான் மற்றொரு ஒரு புதிய கடிகாரம் வாங்கினேன். இரட்சிக்கப்படும் முன்னர் நான் இவ்வுலகத்தின் ஆசாபாசங்களுக்கும், நாகரீகமான வேடங்களுக்கும் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன். அடிக்கடி மாறுபடுகின்ற நவநாகரீக வேடங்களுக்கேற்ப நடந்துக்கொள்ளும்படி என் பணத்தை நான் செலவிட்டேன். தேவனுடைய ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அந்நேரத்திலும், ஆராதனைக் கூடத்திற்குள் நவநாகரீகமாக உடையலங்காரங்களுடன் வருகை செய்கின்ற மக்களை என் கண்கள் கவர்ந்தன. ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டபோதோ இப்பழக்கங்கள் மாறிவிட்டன.

அண்மையில் என்னைப் பார்க்க வந்த என் நண்பர் ஒருவர் என்னுடைய அறையிலுள்ள பழங்காலத்துத் தட்டுமுட்டுச் சாமான்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார். மேசை நாற்காலி போன்ற புதிய பொருள்களை வாங்கித் தருவதற்கு அவர் முன்வந்தார். ஆயினும் அவருடைய வார்த்தைகள் என்னைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை. என்னுடைய தேவைக்கு அறையிலுள்ள இந்தப் பொருள்கள் போதுமானவை. தேவனுடைய ஊழியத்திற்கு ஏராளமான மற்ற தேவைகள் இருக்கும்பொழுது என்னுடைய அறையை அலங்கரிக்கும்படி பணத்தைப் பாழாக்க நான் விரும்பவில்லை. ஒரு தேவ ஊழியனுடைய தனியறையும் மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாகத் திகழவேண்டும்.

கிறிஸ்தவ சமுதாயம் அதனது உட்பூசல்களினிமித்தமாக மிகவும் நெருக்கடியான கட்டத்தினூடே சென்றுகொண்டிருந்தது. கிறிஸ்தவர்கள் தங்கள் நாவை அடக்கியாண்டுகொள்ளக் கற்றுக்கொள்வார்களாயின், இந்த உட்பூசல்கள் மறைந்தொழிவது திண்ணம். இந்தக் காரியத்திலும் நன்மாதிரியைக் கைக்கொள்ளும்படி நான் விரும்புகிறேன். என்னுடைய பழைய சுபாவம் குறுக்கிட்டபடியால், தொடக்க நாட்களில் என்னுடைய தீர்மானத்தில் உறுதியாய் நிற்பது கடினமாய்த் தோன்றியது. ஆயினும் ஊக்கமாய்த் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினேன். அவர் எனக்குத் தேவையான கிருபையை அளித்தார்.

* * அவசரமான வேலையை முன்னிட்டு மலேசியாவில் மேய்ப்பர்.டைட்டஸ் இந்தியா வரவேண்டியதாயிருந்தது. கோலாலம்பூரில் அவரில்லாத நாட்களில் சபையின் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் உள்ள அவர் சபையின் விசுவாசிகளில் சிலர் இதனை விரும்பவில்லை. எனக்கு விரோதமாக அவர்கள் மேய்ப்பர் டைட்டஸ் அவர்களிடம் முறையிட்டார்கள். சுந்தரத்தின் பாடல்கள், பிரசங்கங்களெல்லாம் நன்றாயிருக்கின்றன. அவைகளை நாங்கள் விரும்புகின்றோம். ஆயினும், அவர் எங்களுடன் நெருக்கமாகப் பழகுகின்றாரில்லை. அவருடைய வாயிலிருந்து ஒரு சில வார்த்தைகளை வரவழைப்பதும் மிகவும் கடினமாகும் என்றார்கள். மேய்ப்பர் டைட்டஸ் இதனைக்குறித்து என்னிடம் பேசினபோது அந்த சபையினர் என்னைப்பற்றி கூறிய குற்றசாட்டைக்குறித்து பெருமையோடும், நான் தேவனை நன்றியோடும் ஸ்தோத்திரிக்கிறேன்.

இரட்சிக்கப்படும் முன்னர் நான் மற்றவர்களை குறித்துப்பேசி பரிகாசம் பண்ணித் தொந்தரவு கொடுத்து மகிழ்ந்தேன். அவர்களோடு தமாஷாக வாதாடும்போது ஒரு சிலரே என்னை மேற்கொள்ளமுடியும். ஆயினும் முழுநேர ஊழியத்திற்கு வந்தபின்னரோ, தேவையில்லாத பேச்சுகளை ஒழிக்க முற்பட்டேன். வீணான பேச்சுகள் உரையாடல்களாகியவைகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லுகின்றவன் பொல்லாங்கனாகிய சாத்தானேயாவான். மதிகேடான சொற்கள் புண்படுத்துகின்றன. ஆகையால் தேவ ஊழியன் தன்னுடைய நாவை அடக்கியாண்டுக்கொள்ள அறிந்திருக்கவேண்டும்.

"நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு பாவ சரீரம் ஒழிந்துப்போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்" ரோம 6:6.

"துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்". ரோம 13:14.

"ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்". (கலா 5:16).

(மறைந்த பாஸ்டரும், பரிசுத்தவானுமாகிய மேய்ப்பர் சுந்தரம் அவர்களின் சாட்சிகளடங்கிய "அநாதி கிருபை" என்கின்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)


நன்றி: முகநூல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum